தண்ணீரில் மிதந்து சாதனை படைத்த சிறுவனுக்கு பாராட்டு


தண்ணீரில் மிதந்து சாதனை படைத்த சிறுவனுக்கு பாராட்டு
x
தினத்தந்தி 15 Jun 2023 12:15 AM IST (Updated: 15 Jun 2023 12:56 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் தண்ணீரில் மிதந்து சாதனை படைத்த சிறுவனுக்கு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியைச் சேர்ந்த 9 வயது பள்ளி மாணவர் ஹர்சன் என்பவர் தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் உள்ள நீச்சல் குளத்தில் தொடர்ந்து 7 மணி 30 நிமிடம் 2 வினாடிகள் தண்ணீரில் மிதந்து குளோபல் வேர்ல்டு ரெக்கார்டு சாதனை நிகழ்த்தினார். சிறுவனுக்கு ஆசீர் ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனர் ராஜ்குமார், சைக்கிள் பரிசு வழங்கி பாராட்டினார்.

இதனை தொடர்ந்து அந்த சிறுவன் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில், போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். நிகழ்ச்சியில் மாணவனின் பெற்றோர் கிருஷ்ணபிரபு, தேவி மற்றும் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதே போன்று தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. துணை பொதுச்செயலாளருமான கனிமொழி, சிறுவன் ஹர்சனுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளார். அதில் நீச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஏழரை மணி நேரம் நீரில் மிதந்து குளோபல் உலக சாதனை படைத்து இருக்கும் தூத்துக்குடியை சேர்ந்த ஹர்சன், இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள் என்று கூறி உள்ளார்.


Related Tags :
Next Story