மழை வெள்ளத்தால் பாதிப்பு: தென் மாவட்டங்களுக்கு அண்ணாமலை பயணம்


மழை வெள்ளத்தால் பாதிப்பு: தென் மாவட்டங்களுக்கு அண்ணாமலை பயணம்
x

கனமழை காரணமாக தென்மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருப்பது வேதனையை அளிக்கிறது. இந்தக் கடினமான நேரத்தில், தமிழக பா.ஜனதா தென்மாவட்ட மக்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று உறுதி அளிக்கிறோம்.

சென்னை,

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வெளியிட்ட சமூகவலைதள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

கனமழை காரணமாக தென்மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருப்பது வேதனையை அளிக்கிறது. இந்தக் கடினமான நேரத்தில், தமிழக பா.ஜனதா தென்மாவட்ட மக்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்று உறுதி அளிக்கிறோம். பொதுமக்களுடன் தோளோடு தோளாக நின்று, தமிழக பா.ஜனதா நிர்வாகிகள் களத்தில் நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வருவது ஆறுதலை தருகிறது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களுக்கான உடனடி நிவாரணத் தேவைகளை நிறைவேற்றி உதவ தென் மாவட்ட மக்களை நாளை (புதன்கிழமை) மற்றும் நாளை மறுநாள், நேரில் சென்று சந்திக்க உள்ளேன். அன்றயை தினங்களில் நடைபெற இருந்த 'என் மண் என் மக்கள்' பயணம் வேறு தினங்களுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Related Tags :
Next Story