குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை


குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு - சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
x

குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

தென்காசி:

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் காலம் முடிவடைந்த நிலையில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. இன்று மதியத்திற்கு மேல் குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த தொடர் சாரல் மழையினால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது.

மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவின் மீது தண்ணீர் கொட்டியது. இதனால் பிற்பகல் 3 மணிக்கு சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர். வெள்ளப்பெருக்கு குறைந்ததும் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

தற்போது குறைவான சுற்றுலா பயணிகளே குற்றாலத்திற்கு வருகிறார்கள். அவ்வாறு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்து திரும்பிச் சென்றனர். ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளித்துச் சென்றனர்.


Next Story