மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; வாகனங்கள் செல்ல தடை


மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; வாகனங்கள் செல்ல தடை
x

வைகை ஆற்றின் கரையோரங்களில் வசிப்பவர்கள் ஆற்றில் குளிக்கவோ, கடக்கவோ கூடாது என ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு இருந்தது.

மதுரை,

தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களிலும் தொடர் கனமழை, வெள்ளம் ஆகியவற்றில் சிக்கி மக்கள் தவித்து வருகின்றனர். தொடர்ந்து ரெட் அலார்ட் விடப்பட்டு உள்ளது. இதனால், நிவாரண பணிகளை அரசு துரிதப்படுத்தி வருகிறது. மழை தொடர கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

தென்மாவட்டங்களில் கனமழையால் வீடுகள், கட்டிடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பஸ், கார் உள்ளிட்ட வாகன போக்குவரத்தும், ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டு உள்ளன. சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மின் விநியோகமும் பாதிக்கப்பட்டு மக்கள் இருளில் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மதுரையில் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து, ஆற்றையொட்டிய பகுதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

வைகை ஆற்றின் கரையோரங்களில் வசிப்பவர்கள் ஆற்றில் குளிக்கவோ, கடக்கவோ கூடாது என ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில் வெள்ளப்பெருக்கை முன்னிட்டு வாகனங்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


Next Story