வைகையில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு - இணைப்பு சாலை துண்டிப்பு


வைகையில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு - இணைப்பு சாலை துண்டிப்பு
x

இணைப்பு சாலைகளில் தண்ணீர் குளம்போல் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

மதுரை,

மதுரையில் பெய்த தொடர் மழை காரணமாக வைகை ஆற்றுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்தது. ஏற்கனவே வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், மழை நீரும் ஆற்றுக்கு வருவதால், வைகை ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி தண்ணீர் செல்கிறது.

இதன் காரணமாக கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நேற்று வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ வேண்டாம் என்றும், கால்நடைகளை ஆற்றில் இறக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இரண்டாவது நாளாக வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இணைப்பு சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இணைப்பு சாலைகளில் தண்ணீர் குளம்போல் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். தேனி வைகை அணையில் இருந்து 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

வைகை அணையில் உள்ள 7 சிறிய மதகுகள் வழியாக ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Next Story