10-ம் ஆண்டு நினைவு நாள்: டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு இல்லத்தில் மலர் அஞ்சலி
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் நினைவு தினத்தையொட்டி, சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நினைவு இல்லத்தில் தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினத்தந்தி குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
சென்னை,
பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்தவர் தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். அவரது 10-ம் ஆண்டு நினைவு நாள் இன்று (புதன்கிழமை) கடை பிடிக்கப்பட்டது.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள நினைவு இல்லத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு 10-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் கல்வி, பத்திரிகை, விளையாட்டு, ஆன்மீகம் மற்றும் சமூக சேவைகளைப் போற்றும் வகையில் அனைவரும் முதலில் தலை தாழ்த்தி ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
பின்னர் அங்குள்ள நினைவு பீடத்தில் தினத்தந்தி குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், தினத்தந்தி குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
மாலதி சிவந்தி ஆதித்தன், ஜெயராமையா, அனிதா குமரன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினார்கள். தினத்தந்தி, தந்தி டி.வி., டி.டி. நெக்ஸ்ட், மாலைமலர், ராணி, ராணிமுத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., சுபஸ்ரீ, கோகுலம் கதிர், இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டி.வி. பாரோஸ் ஓட்டல் ஆகியவற்றின் நிர்வாகிகளும், ஊழியர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், கடம்பூர் ராஜு, விஜய் வசந்த் எம்.பி., முன்னாள் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன், மனிதநேய அறக்கட்டளை தலைவர் சைதை துரைசாமி, தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம் ஆகியோரும் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்களும் திரளாக வந்து டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அவர்கள் விவரம் வருமாறு:- தி.மு.க. மாநில இளைஞர் அணி துணை செயலாளர் தூத்துக்குடி எஸ்.ஜோயல், நெசவாளர் அணி மாநில செயலாளர் சிந்து ரவிச்சந்திரன், விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் கணேஷ்குமார் ஆதித்தன், சிம்லா முத்துசோழன், தளபதி பேரவை தலைவர் ஏ.ஆர்.அருள்காந்த், அ.தி.மு.க. இலக்கிய அணி இணை செயலாளர் டி.சிவராஜ், துணை செயலாளர்கள் கே.எஸ்.மலர்மன்னன், இ.சி.சேகர் தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் எம்.எஸ்.காமராஜ், தணிகாசலம், ஜி.கே.தாஸ், வர்த்தக பிரிவு தலைவர் தணிகை வேல், பகுதி செயலாளர் பிரபு, சிவாஜிநாதன், மாநகராட்சி காங்கிரஸ் குழு தலைவர் எம்.எஸ்.திரவியம், மாம்பலம் ராஜேந்திரன்,
பா.ஜனதா மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், நாச்சிக்குளம் சரவணன், வடசென்னை மாவட்ட பொதுச் செயலாளர் வன்னியராஜன், துணைத்தலைவர் எஸ்.ஆர்.ராமையா பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, ஜெயராமன், கொட்டிவாக்கம் முருகன், நீலாங்கரை ஆர்.டி.பாஸ்கர், தே.மு.தி.க. துணை பொதுச்செயலாளர் பார்த்தசாரதி, மாவட்ட செயலாளர்கள் பிரபாகர், மாறன், ஜமுனா, கேசவன், ஏழுமலை, குமார், ஜானகி ராமன், மகஸ், த.மா.கா. தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், பொதுச் செயலாளர் எம்.பி.நாதன், ஆர்.எஸ்.முத்து, தென்சென்னை வடக்கு மாவட்ட தலைவர் மனோகரன்,
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மாநில ஒருங்கிணைப்பாளர் கதிர் ராஜேந்திரன், தொழிற்சங்க பேரவை தலைவர் அன்பு தென்னரசன், மாவட்ட செயலாளர் மு.ஆனந்த், மணிகண்டன், அய்யனார், புதிய நீதிக்கட்சி செயல் தலைவர் ஏ.ரவிக்குமார், ராஜாராம், ஆர்.முரளி, பழனி, பிரகாஷ், செல்வம், லோகநாதன், ராதா கிருஷ்ணன், சீனிவாசன், ஜானகி ராமன், ரமேஷ், மணி, துரைராஜ், ஜெகன், சேகர், ரவி, சங்கர், நடராஜன், தீர்த்தகிரி, சந்தோஷ்குமார், வினோத்குமார்.
புரட்சி பாரதம் மாநில தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி எம்.எல்.ஏ., கொள்கை பரப்பு செயலாளர் ஆலை சிவலிங்கம், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், துணை தலைவர் பரமன்குறிச்சி வி.பி.ஜெயக்குமார், சென்னை மாநகர தலைவர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்தினர்.