தீவன பயிர்கள் தீயில் எரிந்து நாசம்
கால்நடைகளுக்கான தீவன பயிர்கள் தீயில் எரிந்து நாசமானது.
கரூர்
தரகம்பட்டி அருேக உள்ள மேலப்பகுதி ஊராட்சிைய ேசா்ந்தவர் தேவேந்திரன். இவருக்கு சொந்தமான தோட்டம் வீரனம்பட்டி பகுதியில் உள்ளது. அங்கு கால்நடைகளை வளர்த்து வருகிறார். இந்தநிலையில் கால்நடைகளுக்கு தேவையான சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான தீவன பயிர்களை அடுக்கி வைத்திருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தீவன பயிர்கள் தீப்பற்றி எரிந்தது. இதைக்கண்ட உறவினர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் தீவனப்பயிர்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து தேவேந்திரன் கொடுத்த புகாரின்பேரில் சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story