நீர்நிலைகளுக்கு செல்லாமல் குழந்தைகளை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்-பெற்றோர்களுக்கு, கலெக்டர் வேண்டுகோள்


நீர்நிலைகளுக்கு செல்லாமல் குழந்தைகளை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்-பெற்றோர்களுக்கு, கலெக்டர் வேண்டுகோள்
x

சேலம் மாவட்டத்தில் நீர்நிலை பகுதிகளுக்கு செல்லாமல் குழந்தைகளை பெற்றோர் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும் என கலெக்டர் கார்மேகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சேலம்

சேலம்:

சேலம் மாவட்டத்தில் நீர்நிலை பகுதிகளுக்கு செல்லாமல் குழந்தைகளை பெற்றோர் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும் என கலெக்டர் கார்மேகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நீர்நிலைகளில்..

நீர்நிலைகளில் சிறுவர், சிறுமிகள் குளிக்க செல்லும்போது பெற்றோர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். பெற்றோர் தங்களது குழந்தைகள் பாதுகாப்பான முறையில் நீர்நிலைகளை பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் எடுத்து கூற வேண்டும்.

ஆறு, குளங்களில் குளிக்க செல்லும் இளைஞர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக, கிராமப்புற பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் சிறுவர், சிறுமிகள் மற்றும் இளைஞர்கள் குளிக்க செல்லும்போது, பெற்றோர் அல்லது பெரியோர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும், அவர்கள் பாதுகாப்பான முறையில் நீர்நிலைகளை பயன்படுத்துவதை உறுதி செய்திட வேண்டும்.

விழிப்புணர்வுகள்

பெற்றோர் தங்கள் குழந்தைகளை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும் என தொடர்ச்சியாக பல்வேறு விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ள சூழல் மற்றும் ஆறுகளில் பாசன வசதிக்காக நீர் திறந்து விடப்பட்டுள்ள இத்தருணத்தில் நீர்நிலைகள் வெகுவாக நிரம்பி உள்ளன.பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சுற்றுலா மற்றும் உறவினர்களின் வீடுகளுக்கு செல்லும்போது அருகில் உள்ள நீர்நிலைகளின் ஆழமான பகுதிகளை அறியாமல் நீரில் மூழ்கிவிடும் வகையிலான விபத்துகள் ஏற்பட வாய்ப்பாக அமைகிறது.

கவனம் செலுத்த வேண்டும்

பெற்றோர் தங்களின் குழந்தைகளை நீர்நிலைகள் அருகே செல்ல வேண்டாம் என அறிவுறுத்துவதோடு, அவர்களை தொடர்ந்து கண்காணித்து பாதுகாத்துக் கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். ஆழமான ஆற்று பகுதிகள் மற்றும் குளங்களுக்கு அருகில் எச்சரிக்கை பலகைகளையும், தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளதையும் தொடர்ந்து உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுப் பணித்துறை அலுவலர்கள் உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story