சென்னை விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்
x

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு விமானம் சென்றது. முன்னதாக அதில் செல்ல வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சென்னையை சேர்ந்த 2 பேரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர். 2 பேரும் சுற்றுலா விசாவில் சிங்கப்பூர் செல்ல வந்து இருந்தனர். அவர்களது உடைமைகளை சோதனை செய்தபோது கைப்பை மற்றும் உள்ளாடைக்குள் அமெரிக்க டாலர் மறைத்து வைத்து கடத்த முயன்றதை கண்டுபிடித்தனர். அதனை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செயதனர்.

அதேபோல் தாய்லாந்து செல்லும் விமானத்தில் பயணம் செய்ய வந்த வாலிபரின் உள்ளாடைக்குள் இருந்து சவுதிஅரேபிய ரியாலையும் சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினர்.

சென்னை விமான நிலையத்தில் 3 பேரிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், 3 பேரின் விமான பயணத்தை ரத்துசெய்தனர். மேலும் 3 பேரையும் கைது செய்து, அந்த பணத்தை அவர்களிடம் கொடுத்து அனுப்பியது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனா்.


Next Story