சென்னையில் 2 ரவுடிகள் என்கவுண்ட்டர் செய்யப்பட்ட இடத்தில் தடயவியல் துறை சோதனை..!


சென்னையில் 2 ரவுடிகள் என்கவுண்ட்டர் செய்யப்பட்ட இடத்தில் தடயவியல் துறை சோதனை..!
x

சென்னையில் 2 ரவுடிகள் என்கவுண்ட்டர் செய்யப்பட்ட இடத்தில் தடயவியல் துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.

சென்னை,

சென்னை அருகே, செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதி சாலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, வேகமாக வந்த கார் போலீசாரின் வாகன சோதனைக்கு நிற்காமல் சென்றது.

இதனை தொடர்ந்து அந்த காரை போலீசார் பின் தொடர்ந்து சென்ற நிலையில் காரில் இருந்தது ரவுடிகள் சோட்டா வினோத், ரமேஷ் என்பது தெரியவந்தது. அப்போது, ரவுடிகள் இருவரும் போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில், தாக்குதலுக்கு பதிலடியாக போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். போலீசார் நடத்திய என்கவுண்ட்டரில் சோட்டா வினோத், ரமேஷ் ஆகிய 2 ரவுடிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கூடுவாஞ்சேரியில் போலீசார் என்கவுண்ட்டர் நடத்திய இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் ரவுடிகள் வந்த காரின் கதவில் உள்ள கைப்பிடி, அவர்களின் 2 செல்போன்கள் உள்ளிட்டவற்றில் உள்ள கைரேகை பதிவுகளை அதிகாரிகள் ஆய்து செய்து வருகின்றனர்.

1 More update

Next Story