கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம்


கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம்
x
தினத்தந்தி 6 April 2023 6:45 PM GMT (Updated: 6 April 2023 6:45 PM GMT)

கடலூர் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகளுக்கு உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தை முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்

கடலூர்

கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் வழங்கும் நிகழ்ச்சி பாதிரிக்குப்பத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.சி.சம்பத் தலைமை தாங்கி, அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தை வழங்கினார். ஒரு விண்ணப்ப படிவத்தில் 25 உறுப்பினர்களை சேர்க்க வேண்டும், உறுப்பினராக சேருபவர்கள் ரூ.10 கட்டணமாக செலுத்த வேண்டும், ஏற்கனவே உறுப்பினராக இருப்பவர்களும் விண்ணப்பித்து, தங்களது அட்டையை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட அவை தலைவர் சேவல்குமார், மாநில மீனவரணி தங்கமணி, பகுதி செயலாளர்கள் கந்தன், மாதவன், வெங்கட்ராமன், ஒன்றிய செயலாளர் காசிநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story
  • chat