முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் சந்திப்பு..!


முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் சந்திப்பு..!
x

மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ள நிலையில் ப.சிதம்பரம் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

சென்னை,

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கான தேர்தலை இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. இதனையடுத்து வேட்புமனு தாக்கல் நடந்து வருகிறது. இதில் தி.மு.க. தரப்பில் கிரிராஜன், கல்யாண சுந்தரம், ராஜேஸ்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டனர்.

அ.தி.மு.க. தரப்பில் சி.வி.சண்முகம், தர்மர் ஆகியோர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 2 பேரும் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி, தமிழக மாநிலங்களவை காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தை அறிவித்தது. இதற்கான அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் வெளியிட்டார்.

இந்த நிலையில் ப.சிதம்பரம் மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட உள்ள நிலையில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். ப.சிதம்பரம் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story