சின்னசேலம் அருகே மத்திய அரசு ஊழியர் என்று கூறி ஏமாற்றிய வாலிபர் கைது


சின்னசேலம் அருகே    மத்திய அரசு ஊழியர் என்று கூறி ஏமாற்றிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 11 Oct 2022 12:15 AM IST (Updated: 11 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே மத்திய அரசு ஊழியர் என்று கூறி ஏமாற்றிய வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

கள்ளக்குறிச்சி


சின்னசேலம்,

சின்னசேல் அருகே உள்ள காட்டு கொட்டகையை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 46). விவசாயி. சம்பவத்தன்று வேல்முருகன் தனது நிலத்தில் மக்காச்சோளம் பயிர் செய்த போது, அங்கு வந்த பக்கத்து நிலத்தை சேர்ந்த வெங்கடேசன் என்கிற மானஸ்ராஜ் (34), நில பிரச்சினை இன்னும் முடியாத நிலையில் எப்படி இங்கு வேலை செய்யலாம் என்று அவரிடம் கேட்டுள்ளார். மேலும் தான் மத்திய அரசு ஊழியர் என்று கூறி மிரட்டி உள்ளார். இதுகுறித்து வேல்முருகன் சின்னசேலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் மத்திய அரசு ஊழியர் என்று ஏமாற்றியதுடன், 2 கார்களில் 'கவர்மென்ட் ஆப் இந்தியா' என்று ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டு வலம் வந்தது தெரியவந்தது. இதையடுத்து வெங்கடேசனை போலீசார் கைது செய்து, 2 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.


Next Story