பாத்திரக்கடை உரிமையாளரிடம் ரூ.1.30 லட்சம் மோசடி
புதுச்சத்திரம் அருகே சாமியார் போல் வேடமணிந்து வந்த கும்பல் பாத்திரக்கடை உரிமையாளரிடம் ரூ.1.30 லட்சம் மோசடி செய்தனர்.
நாமக்கல்
புதுச்சத்திரம் அருகே உள்ள பிள்ளாநல்லூர் வண்டிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 65). இவர் பாத்திரக்கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது கடைக்கு சாமியார் வேடத்தில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளனர். பின்னர் அவா்கள் திருவண்ணாமலையில் அன்னதானம் செய்தால உங்கள் குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும் கூறி உள்ளனர். அதை நம்பிய ராஜேந்திரன், சாமியார் கும்பலிடம் ரூ.1.30 லட்சத்தை கொடுத்து உள்ளார். பின்னர் அவர்கள் அனைவரும் போலி சாமியார்கள் என்பது ராஜேந்திரனுக்கு தெரிய வந்தது. இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story