திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி காதலியிடம் 16 பவுன் நகை வாங்கி மோசடி


திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி காதலியிடம் 16 பவுன் நகை வாங்கி மோசடி
x
தினத்தந்தி 17 Oct 2023 12:15 AM IST (Updated: 17 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குறிஞ்சிப்பாடியில் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி காதலியிடம் 16 பவுன் நகை வாங்கி மோசடி செய்த காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர்

விருத்தாசலம் அருகே உள்ள பூதாம்பூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் பிச்சை மகன் சுதாகர் (வயது 38). இவருக்கும், குறிஞ்சிப்பாடியை சேர்ந்த 34 வயதுடைய பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது. இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்தும், செல்போனில் பேசியும் தங்களது காதலை வந்தனர்.

இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது. அவர்களும் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினர். திருமணத்துக்கும் சம்மதம் தெரிவித்து, அதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

திருமணம் செய்ய மறுப்பு

இந்தநிலையில் சுதாகர், தனது காதலியிடம் தனியாக தொழில் தொடங்கப்போவதாகவும், அதற்கு பணம் தேவைப்படுவதாகவும் கூறினார். உடனே அவரது காதலியும், தனது திருமணத்திற்காக வைத்திருந்த 16 பவுன் நகையை கொடுத்தார்.

அதன்பிறகு சுதாகர், தனது காதலியுடன் பேசுவதை தவிர்த்தார். அவரது செல்போனும் சுவிட்ஜ் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது காதலி, சுதாகரின் வீட்டுக்கு சென்று தன்னை திருமணம் செய்யுமாறும், இல்லையெனில் தனது நகையை தருமாறும் கேட்டார். ஆனால் அவர், திருமணம் செய்ய மறுத்ததோடு நகையை கொடுக்கவும் மறுத்து திட்டினார். இது குறித்து அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் சுதாகர் மீது குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story