அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி - 3-க்கும் மேற்பட்டோர் கைது


அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி - 3-க்கும் மேற்பட்டோர் கைது
x

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, மோசடி செய்தவர்களுக்கு உடந்தையாக இருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர்,

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, போலி பணி நியமன ஆணைகளை கொடுத்து ஏமாற்றிய நபர்களுக்கு, உடந்தையாக இருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சேகர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி குறிப்பிட்டிருந்தார்.

இதன் பேரில், விசாரணை மேற்கொண்ட போலீசார், சுமார் 3 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்த 3-க்கும் மேற்பட்டோரை ஏற்கனவே கைது செய்த நிலையில், தற்போது மோசடிக்கு உடந்தையாக இருந்த, தஞ்சையைச் சேர்ந்த ரேவதி என்பவரை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து போலி ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.


Next Story