புதையல் எடுத்துத் தருவதாக கூறி ரூ.35 லட்சம் மோசடி - பணம் திரும்ப கிடைக்காததால் மோசடி செய்தவரின் நண்பர் கடத்தல்
புதையல் எடுத்துத் தருவதாக கூறி ரூ.35 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்தவரின் நண்பரை கடத்திய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்,
புதையல் எடுத்துத் தருவதாக கூறி ரூ.35 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்தவரின் நண்பரை கடத்திய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த கதிரவன் என்பவர், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த தனது நண்பர்கள் சிவக்குமார், கோவிந்தராஜ், சைபியுல்லா, பிரபு ராமச்சந்திரன் ஆகிய ஐந்து பேரிடம் புதையல் எடுத்துத் தருவதாக கூறி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ரூ.35 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது. புதையல் எடுத்து தராததால் ஆத்திரமடைந்த 5 பேரும் பணத்தை திரும்ப பெற முயன்றுள்ளனர்.
கதிரவனை தொடர்பு கொள்ள முடியாததால் திருப்பூர் திருமுருகன்பூண்டியில் வசிக்கும் அவரது நண்பர் பாலாஜியை பார்க்க சென்றபோது அவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் 5 பேரும் அவரை காரில் கடத்திச் சென்றுள்ளனர். இது குறித்து அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் அளித்த தகவலின் பேரில் இரண்டு சொகுசு கார்களில் ஈரோடு மாவட்டம் பவானி வழியாக சென்றபோது, சோதனை சாவடியில் இருந்த போலீசார் சுற்றிவளைத்து அவர்களை கைது செய்தனர்.
பின்னர், காரில் இருந்த பாலாஜி, அவரை கடத்திச் சென்ற ஐந்து பேர் மற்றும் இரண்டு கார்களை திருமுருகன்பூண்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.