வீட்டுமனை வாங்கி தருவதாக ரூ.4¾ லட்சம் மோசடி; ஒருவர் மீது வழக்கு


வீட்டுமனை வாங்கி தருவதாக ரூ.4¾ லட்சம் மோசடி; ஒருவர் மீது வழக்கு
x

வீட்டுமனை வாங்கி தருவதாக ரூ.4¾ லட்சம் மோசடி செய்ததாக ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திருச்சி

திருச்சி தீரன்நகர் வாஞ்சிநாதன் தெருவை சேர்ந்தவர் செல்வமணி (வயது 60). இவர் திருச்சி கள்ளிக்குடி பகுதியில் காலிமனை வாங்குவதற்காக முயற்சி மேற்கொண்டார். இதற்காக கடந்த 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரிடம் ரூ.4 லட்சத்து 80 ஆயிரத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர் மனையும் வாங்கி தராமல், பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தன்னை மோசடி செய்துவிட்டதாகவும், அவர் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரியும் செல்வமணி திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து கோர்ட்டு உத்தரவின்பேரில், கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசார் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story