ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி
ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் கலா (வயது 33). இவர் நற்செய்தி கூட்டங்களுக்கு செல்லும் போது, இவருக்கும் திருச்சி கிராப்பட்டி அன்புநகரை சேர்ந்த அருண் (31) என்பவரின் மனைவி பெனாஸ் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. அப்போது, பெனாஸ் தனது கணவர் அருணையும், தந்தை ஆரூணையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார். அப்போது, கலாவுக்கு ரெயில்வேயில் வேலை வாங்கி கொடுப்பதாக உத்தரவாதம் அளித்துள்ளார். பின்னர் வேலைக்காக அவர் கலாவிடம் இருந்து ரூ.5 லட்சம் வரை வாங்கியுள்ளார். ஆனால் 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அவர்கள் வேலை வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் திரும்ப கொடுக்கவில்லை. இதனால் கலா, தன்னை ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்றுத்தரக்கோரி திருச்சி 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் அருண், பெனாஸ், ஆரூண் ஆகியோர் மீது எடமலைப்பட்டி புதூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.