பெண்ணிடம் ரூ.5¾ லட்சம் மோசடி
வெளிநாட்டில் இருந்து நகை, ஐபோன் அனுப்புவதாக கூறி பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெளிநாட்டில் இருந்து நகை, ஐபோன் அனுப்புவதாக கூறி பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகை, செல்போன்
சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். அவருடைய மனைவி தனபாக்கியம் (வயது 34). கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முகநூல் மூலம் வெளிநாட்டில் வசிப்பதாக கூறி ஒருவர் அவரிடம் நண்பராகினார். தொடர்ந்து அவர்கள் வாட்ஸ்-அப் மூலம் நட்பை தொடர்ந்தனர்.
இதற்கிடையில் தனபாக்கியத்திடம் அந்த நபர் உங்களுக்கு வெளிநாட்டில் இருந்து விலை உயர்ந்த ஐபோன், தங்க செயின் மற்றும் வெளிநாட்டு கரன்சி ஆகியவை பரிசாக அனுப்பி உள்ளதாக தெரிவித்தார். கடந்த டிசம்பர் மாதம் தனபாக்கியத்திடம் பேசிய மர்ம நபர் ஒருவர், நான் டெல்லி விமான நிலையத்தில் இருந்து பேசுவதாகவும், உங்களுக்கு வெளிநாட்டில் இருந்து பார்சல் வந்துள்ளதாகவும் கூறினார்.
ரூ.5¾ லட்சம் மோசடி
மேலும் பேசிய அந்த நபர் இந்த பார்சலுக்கு வரி செலுத்த வேண்டும் என்று அவரிடம் தெரிவித்தார். இதை உண்மை என நம்பிய தனபாக்கியம் அந்த நபர் கூறிய வங்கி கணக்கிற்கு 7 தவணையாக ரூ.5 லட்சத்து 75 ஆயிரத்து 500 செலுத்தினார். அந்த பார்சல் இவருக்கு நீண்ட நாட்களாகியும் வரவில்லை. மேலும் மர்ம நபர் பேசிய செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் என வந்தது.
பின்னர் இந்த மோசடி குறித்து தனபாக்கியம் மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைலாசம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.