மருந்து கடை உரிமையாளரிடம் ரூ.82¼ லட்சம் மோசடி; தந்தை-மகன் கைது


மருந்து கடை உரிமையாளரிடம் ரூ.82¼ லட்சம் மோசடி; தந்தை-மகன் கைது
x

மருந்து கடை உரிமையாளரிடம் ரூ.82¼ லட்சம் மோசடி செய்த தந்தை-மகன் மீது கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

ஏலச்சீட்டு

திருச்சி அரியமங்கலம் காமராஜ்நகரை சேர்ந்தவர் முஸ்தபா (வயது 53). இவர் அரியமங்கலத்தில் மருந்து கடை நடத்தி வருவதுடன், அரியமங்கலம் பகுதி வர்த்தகர்கள் நலச்சங்க தலைவராகவும் உள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு முஸ்தபா ரூ.30 லட்சம், ரூ.5 லட்சம், ரூ.3 லட்சம், ரூ.2 லட்சம் என்று ஏலச்சீட்டு குழுக்களை நடத்தி வந்தார்.

அப்போது, பொன்மலை ரெயில்வே காலனியில் வசித்து வரும் ரெயில்வே ஊழியரும், முஸ்தபாவின் நண்பருமான சேகர், தனது மகன் அருணையும் ஏலச்சீட்டு குழுக்களில் சேர்த்துக்கொள்ளும்படி கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2017-ம் ஆண்டு நவம்பா் மாதம் வரை மொத்தம் 28 குழுக்களில் ரூ.3 கோடி மதிப்பிலான சீட்டில் அருண் சேர்ந்து பணம் எடுத்துள்ளார்.

ரூ.82¼ லட்சம் மோசடி

ஆரம்பத்தில் மாதம் தோறும் சீட்டு பணம் செலுத்தி வந்த அருண் பிறகு பணம் செலுத்தவில்லை. அனைத்து குழுக்களிலும் சேர்த்து அருண் மொத்தம் ரூ.82 லட்சத்து 43 ஆயிரத்து 370 பாக்கி வைத்துள்ளார். இதனால் முஸ்தபாவால் அந்த குழுக்களில் உள்ள மற்றவர்களுக்கு சீட்டு பணம் கொடுக்க முடியவில்லை.

இதுபற்றி அவர் சேகர் மற்றும் அருணிடம் கேட்டபோது அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்ததுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து முஸ்தபா திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அருண், அவருடைய தந்தை சேகர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story