ரூ.1¾ லட்சம் மோசடி; ஆடு வியாபாரி மீது வழக்கு


ரூ.1¾ லட்சம் மோசடி; ஆடு வியாபாரி மீது வழக்கு
x

ரூ.1¾ லட்சம் மோசடி செய்த விவகாரத்தில் ஆடு வியாபாரி மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது.

மதுரை

மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்தவர் சாகுல்அமீது (வயது 40). தெற்குமாசி வீதி குப்புப்பிள்ளை தோப்பு பகுதியை சேர்ந்தவர் நஜிமுதீன், ஆடு வியாபாரி. இவர் ஆடு வாங்கி வியாபாரம் செய்வதற்காக சாகுல்அமீதிடம் பல்வேறு தவணைகளில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார். அதனை ஜூலை மாதம் பக்ரீத் பண்டிகை முடிந்த உடன் தருவதாக தெரிவித்தார். அதன்பின்னர் சாகுல்அமீது அவரிடம் பணத்தை கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தை தராமல் ஏமாற்றி வந்தார். மேலும் அவர் குடியிருந்த வீட்டை காலி செய்து விட்டு தலைமறைவாகி விட்டார். எனவே தனது பணத்தை மீட்டு, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாகுல்அமீது அவனியாபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் நஜிமுதீன் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Related Tags :
Next Story