விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி


விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி
x

காட்டாம்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் காட்டாம்பூண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் மற்றும் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி நிதியில் இருந்து பள்ளிக்கு மேஜை மற்றும் இருக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னாள் எம்.பி. த.வேணுகோபால் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் இஸ்மாயில் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை வி.டி.சாந்தி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக மாநில தடகள சங்க துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் கலந்து கொண்டு பள்ளியை சேர்ந்த 78 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் மற்றும் மேஜை, இருக்கைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இதில் ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, துணைத்தலைவர் ரமணன், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், மாவட்ட அமைப்பாளர் ஏ.ஏ.ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளியின் கணினி ஆசிரியர் ராஜா நன்றி கூறினார்.


Related Tags :
Next Story