100 பேருக்கு விலையில்லா ஆடுகள்


100 பேருக்கு விலையில்லா ஆடுகள்
x

திருவள்ளூர் அருகே 100 பேருக்கு விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூர்

திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தமிழக அரசின் ஏழ்மை நிலையில் உள்ள விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண் பயனாளிகள் என 100 பேருக்கு விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ.வும்,, தி.மு.க.வின் தலைமை செயற்குழு உறுப்பினருமான வி.ஜி.ராஜேந்திரன் தலைமை தாங்கி 100 பயனாளிகளுக்கு தமிழக அரசின் சார்பில் இலவச வெள்ளாடுகளை வழங்கினார். அவருடன் கடம்பத்தூர் ஒன்றிய குழு தலைவர் சுஜாதா சுதாகர், ஒன்றிய குழு துணைத்தலைவர் சரஸ்வதி ரமேஷ், பேரம்பாக்கம் முதல் நிலை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி சுயம் பிரகாஷ், மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் ஆர்.டி.இ.ஆதிசேஷன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன், துணை இயக்குனர் டாக்டர் வெங்கட்ரமணன், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், அரிகிருஷ்ணன், மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் முரளி, ஊராட்சி செயலாளர்கள் கண்ணதாசன், வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story