திருப்பத்தூரில் இலவச மருத்துவ முகாம்
திருப்பத்தூரில் இலவச மருத்துவ முகாம் நடந்தது
திருப்பத்தூர்,
கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திருப்பத்தூர் தனியார் பள்ளி வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் தலைமை தாங்கினார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் முகாமினை தொடங்கி வைத்து பேசினார். திருப்புவனம் பேரூராட்சி சேர்மன் சேங்கைமாறன், திருப்பத்தூர் பேரூராட்சி சேர்மன் கோகிலாராணி, தி.மு.க. கல்லல் ஒன்றிய செயலாளர் குன்றக்குடி சுப்பிரமணியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் ரவி, மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் நாராயணன், நகர செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இம்முகாமில் 1236 பயனாளிகள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். மேல் சிகிச்சைக்காக 34 பேர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 27 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் மற்றும் சஞ்சீவி பெட்டகங்களையும், 4 பயனாளிகளுக்கு இலவச கண் கண்ணாடிகளையும் அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், துணை இயக்குனர் விஜய்சந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார், முன்னாள் சேர்மன் சாக்ளா, சுகாதார ஆய்வாளர் சகாயஜெரால்ட்ராஜ், சுலைமான் பாதுஷா, ஹரி, மருந்தாளுநர் ராமகிருஷ்ணன் பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.