சென்னையில் மூத்த குடிமக்களுக்கான இலவச பயண டோக்கன் 29-ந்தேதி முதல் விநியோகம்
சென்னை வாழ் மூத்த குடிமக்களுக்கான இலவச பயண டோக்கன் வருகிற 29-ந்தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை மாநகர பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்வதற்கான டோக்கன் வரும் 21 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 60 வயதுக்கு மேற்பட்ட சென்னை வாழ் மூத்த குடிமக்கள், மாநகர பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்ய பயண டோக்கன்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், அடுத்த அரையாண்டிற்கான டோக்கன்களை வருகிற 21 ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 31 ஆம் தேதி வரை 40 மையங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story