பொள்ளாச்சி: கடன் தர மறுத்த பெயிண்டருக்கு அடி உதை - நண்பர்கள் கைது


பொள்ளாச்சி: கடன் தர மறுத்த பெயிண்டருக்கு அடி உதை - நண்பர்கள் கைது
x

பொள்ளாச்சி அருகே கடன் தர மறுத்த பெயிண்டரை அடித்து உதைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி:

கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அருகே உள்ள கிட்ட சூரம்பாளையத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 41). இவர் பெயிண்டராக உள்ளார். இவரிடம் டி.கோட்டம்பட்டியை சேர்ந்த ஓட்டல் தொழிலாளி லோகேஷ் (24) மற்றும் மற்றும் அவரது நண்பர் பிரதீப் (24) ஆகியோர் நண்பர்களாக அறிமுகமாகியுள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று லோகேஷ் மற்றும் பிரதீப் ஆகியோர் ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு சென்று தங்களுக்கு பணம் கடனாக வேண்டும் என கேட்டுள்ளனர். அதற்கு அவர் தன்னிடம் தற்போது, பணம் இல்லை என்றும் பின்னர் இருக்கும்போது தருவதாக கூறியுள்ளார். ஆனால் அவர்கள் உடனே பணம் வேண்டும் என்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் சிறிது நேரத்தில் இது தகராறாக மாறியது. இதில், ஆத்திரமடைந்த லோகேஷ் மற்றும் பிரதீப் இருவரும் ராதாகிருஷ்ணனை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு சரமாரியாக தாக்கினர். பின்னர் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்றனர்.

தாக்குதலில் பலத்த காயம் அடைந்த ராதாகிருஷ்ணன் வலியால்அலறினார். அலறல் சத்தத்தை கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் ராதாகிருஷ்ணனை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

இதுகுறித்து ராதாகிருஷ்ணன் மகாலிங்கபுரம் போலீசில் புகார் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி லோகேஷ் மற்றும் பிரதீப்பை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story