மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு நாளை மதியம் 1 மணிக்கு இறுதி ஊர்வலம்


மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு நாளை மதியம் 1 மணிக்கு இறுதி ஊர்வலம்
x

தீவுத்திடலில் இருந்து மதியம் 1 மணிக்கு விஜயகாந்த் உடல் ஊர்வலமாக தேமுதிக அலுவலகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

சென்னை,

தேமுதிக நிறுவனரும், பிரபல திரைப்பட நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரின் உடல் இன்றும் நாளையும் தேமுதிக தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்கான வைக்கப்பட்டு நாளை 4.45 மணிக்கு அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட உள்ளது.

அவரது உடலுக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தீவுத் திடலில் வைக்கப்படுகிறது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் இருந்து நாளை காலை 6 மணிக்கு விஜயகாந்தின் உடல் தீவுத்திடலுக்கு மாற்றப்படும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணி வரை தீவுத்திடலில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட உள்ளது. பொதுமக்கள் அஞ்சலிக்கு பின்னர், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நாளை மாலை 4.45 மணிக்கு விஜயகாந்தின் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

* தேமுதிக அலுவலகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ரத்தோர் நேரில் ஆய்வு செய்தார். பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து குறித்து காவல் அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

* இந்நிலையில் விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தீவுத் திடலில் வைக்கப்பட உள்ளநிலையில், அங்கு செய்யப்பட வேண்டிய ஏற்பாடுகள் குறித்து மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு நடத்தினார்.

* தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை மதியம் 12 மணி வரை கடைகள் அடைக்கப்பட உள்ளன.

* விஜயகாந்த் உடலுக்கு மத்திய அரசு சார்பில் நாளை மரியாதை செய்யப்பட உள்ளது.


Next Story