மதுரை மத்திய சிறை கைதிகள் கைவண்ணத்தில் உருவான விநாயகர் சிலைகள்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை மத்திய சிறையில் உள்ள கைதிகள் கைவண்ணத்தில் உருவான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.
மதுரை,
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை நாளை கோலாகலமுடன் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு பல்வேறு வடிவிலான விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் பல இடங்களில் நடந்து வருகின்றன.
இந்த சிலைகளை பொதுமக்களும் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இதனை முன்னிட்டு மதுரை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணிக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இதனையடுத்து, அவர்கள் சிலை தயாரிப்பில் ஈடுபட்டனர். நேர்த்தியாக தயாரான சிலைகளுக்கு வண்ண பூச்சுகளும் அளித்து உள்ளனர். இந்த சிலைகள் மதுரை மத்திய சிறை வளாக பகுதிகளில் உள்ள 2 சிறைச்சாலை பஜார்களில் விற்பனைக்கு வைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story