குண்டர் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது


குண்டர் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது
x
தினத்தந்தி 18 July 2023 11:47 PM IST (Updated: 19 July 2023 4:55 PM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டையில் குண்டர் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது செய்யப்பட்டார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஆற்காட்டை சேர்ந்த குமரேசன் என்பவரை கைது செய்தனர்.

இவர் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததால், இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி கலெக்டர் வளர்மதிக்கு பரிந்துரை செய்தார்.

இதையடுத்து கஞ்சா வியாபாரி குமரேசனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் குமரேசன் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

1 More update

Related Tags :
Next Story