காயத்ரி ரகுராம் கட்சி பொறுப்புகளில் இருந்து 6 மாதங்களுக்கு நீக்கம் - அண்ணாமலை அறிவிப்பு


காயத்ரி ரகுராம் கட்சி பொறுப்புகளில் இருந்து 6 மாதங்களுக்கு நீக்கம் - அண்ணாமலை அறிவிப்பு
x
தினத்தந்தி 22 Nov 2022 12:39 PM IST (Updated: 22 Nov 2022 1:18 PM IST)
t-max-icont-min-icon

கட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து செயல்பட்டதாக காயத்ரி ரகுராம் கட்சி பொறுப்புகளில் இருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

சென்னை,

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் திருமதி. காயத்ரி ரகுராம் அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு நீக்கப்படுகிறார். மாத காலத்திற்கு ஆகவே கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் ஒழுங்கு நடவடிக்கை குழு தனது அறிக்கை சமர்ப்பிக்கும் வரை ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளர் சூர்யா சிவா கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.


Next Story