பொதுக்குழு கூட்டம்


பொதுக்குழு கூட்டம்
x

கரூரில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

கரூர்

கரூர் மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் கரூரில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகமது அலி ஜின்னா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் கரூர் மாநகராட்சி மற்றும் பள்ளப்பட்டி நகராட்சியில் உயர்த்தப்பட்ட சொத்து வரி குளறுபடிகளை சரி செய்ய வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரியில் போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும். பஞ்சப்பட்டி ஏரியை தூர்வாரி காவிரி நீரை கொண்டு செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.


Next Story