சிறுமியின் கண்களை கட்டி பலாத்காரம்: வீடியோவை வாட்ஸ் அப்பில் பரப்பி அட்டூழியம்


சிறுமியின் கண்களை கட்டி பலாத்காரம்: வீடியோவை வாட்ஸ் அப்பில் பரப்பி அட்டூழியம்
x
தினத்தந்தி 26 Feb 2024 5:13 AM IST (Updated: 26 Feb 2024 6:16 AM IST)
t-max-icont-min-icon

சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் சிறுமி தெரிவித்தாள்.

ஓமலூர்,

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன், அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளான். அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அங்குள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளான்.

அங்கு சிறுமியின் கண்களை துணியால் கட்டி உள்ளான். பின்னர் கட்டாயப்படுத்தி சிறுமியை பலாத்காரம் செய்துள்ளான். அதனை மற்றொரு சிறுவன் செல்போனில் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.

இதேபோன்று பலமுறை அந்த சிறுவன், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதற்கிடையே தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வீடியோ வாட்ஸ்அப்பில் வைரலானது. இதைக்கண்டு அந்த சிறுமி அதிர்ச்சி அடைந்தாள்.

இதையடுத்து சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறி அந்த சிறுமி கதறி அழுதாள். அதன்பிறகு அவள் தனது பெற்றோருடன் தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

இந்த விசாரணையில், சிறுமியின் கண்களை கட்டி பாலியல் பலாத்காரம் செய்ததுடன் அதனை செல்போனில் வீடியோவாக எடுத்து வாட்ஸ்அப்பில் பரவ விட்ட அந்த 2 சிறுவர்கள் மீது வன்கொடுமை, போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அந்த 2 சிறுவர்களையும் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.

1 More update

Next Story