கூடுவாஞ்சேரி அருகே சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை

கூடுவாஞ்சேரி அருகே சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்குட்பட்ட அமுதம் காலனி மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரி (வயது 15), இவர் நந்திவரத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் ஜெகதீஸ்வரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அவரது உறவினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஜெகதீஸ்வரியை பரிசோதனை செய்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
போலீசார் விசாரணை
இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கூடுவாஞ்சேரி போலீசார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட ஜெகதீஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமி ஜெகதீஸ்வரி எதற்காக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து பெற்றோரிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.






