கோகுல் ராஜ் கொலை வழக்கு- நீதிமன்ற தீர்ப்பு ஆறுதல் அளிக்கிறது.. விசிக தலைவர் திருமாவளவன்
கோகுல் ராஜ் கொலை வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு ஆறுதல் அளிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
கோகுல்ராஜ் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் யுவராஜ் உள்ளிட்ட 10 பேருக்கு வழங்கபட்ட ஆயுள் தண்டனையை ஐகோர்ட்டு உறுதி செய்தது.
இந்த தீர்ப்பு தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் தன்னுடைய டுவிட்டரில் கூறி இருப்பதாவது;
கோகுல்ராஜ் படுகொலை வழக்கில் சாதிவெறிப் பித்தர்களுக்கு சிறப்பு நீதிமன்றம் அளித்த வாழ்நாள் சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்திருப்பதுடன், முதல் குற்றவாளி உயிருள்ள வரையில் சிறையிலிருக்க வேண்டுமெனவும் உறுதிப்படுத்தித் தீர்ப்பளித்திருப்பது பெரும் ஆறுதல் அளிக்கிறது.
இந்நிலையில், ஆணவக்கொலையைத் தடுத்திட ஏதுவாக சட்டமியற்ற முன்வர வேண்டுமென தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய ஒன்றிய அரசுகளை வலியுறுத்துகிறோம்.
அச்சுறுத்தலைப் பொருட்படுத்தாமல் துணிந்து வாதாடி நீதிகாத்த வழக்குரைஞர்கள் ப.ப.மோகன், லஜபதிராய் உள்ளிட்ட அனைவருக்கும் சிறுத்தைகளின் நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.