தங்கம் பவுனுக்கு ரூ.1,200 உயர்வு
நாமக்கல்லில் தங்கம் பவுனுக்கு ரூ.1,200 உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.
நாமக்கல் நகரில் கடந்த வாரம் சரிவடைந்த தங்கம் விலை, இந்த வாரம் தொடக்கம் முதலே அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக நேற்று முன்தினம் கிராம் ரூ.5,413-க்கும், ஒரு பவுன் ரூ.43 ஆயிரத்து 304-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் நேற்று கிராமுக்கு ரூ.150 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ.5,563-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு பவுனுக்கு ரூ.1,200 அதிகரித்து ரூ.44 ஆயிரத்து 504-க்கு விற்பனையானது. தங்கம் விலை மீண்டும் 'கிடுகிடு' என உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire