அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்; ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அணிவித்தார்


அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்; ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அணிவித்தார்
x
தினத்தந்தி 20 Jun 2023 7:45 PM GMT (Updated: 21 Jun 2023 8:57 AM GMT)

ராகுல்காந்தி பிறந்தநாளையொட்டி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்; ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. அணிவித்தார்.

திருநெல்வேலி

இட்டமொழி:

ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் தொகுதிக்குட்பட்ட ரெட்டியார்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார். குழந்தைகளின் தாய்க்கு பழத்தட்டுடன் புடவையும் பரிசாக வழங்கினார்.

மேலும் அதே ஆஸ்பத்திரிகளில் அதற்கு முன் தேதியில் பிறந்த குழந்தைகளுக்கும் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், வட்டார தலைவர்கள், கிராம கமிட்டி தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story