சென்னை பைபாஸ் சாலையில் கோர விபத்து; அந்தரத்தில் பறந்து கவிழ்ந்த கார் - அதிமுக பிரமுகர்கள் உட்பட 3 பேர் பலி


சென்னை பைபாஸ் சாலையில் கோர விபத்து;  அந்தரத்தில் பறந்து கவிழ்ந்த கார் - அதிமுக பிரமுகர்கள் உட்பட 3 பேர் பலி
x

சென்னை, வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் கார் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னை,

கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர்கள் ரமேஷ் பாபு, சுரேஷ் பாபு. இருவரும் சகோதரர்கள். இவர்கள் இருவரும் அதிமுகவை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு சொந்தமான ஜேசிபி மற்றும் பொக்லைன் எந்திரம் இருந்து வருகிறது. அந்த வாகனங்கள் பழுதானதால் அவர்கள் தங்களது சொந்த ஊரில் இருந்து மெக்கானிக்கை அழைத்து கொண்டு சென்று நேற்று வாகனத்தை சரி செய்து விட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

அந்த வாகனத்தில் 5 பேர் வந்துள்ளனர். அப்போது வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் மலையம்பாக்கம் அருகே வந்து கொண்டிருந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பில் மோதி சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

இதில் காரில் பயணம் செய்த ரமேஷ் பாபு, சுரேஷ் பாபு, சுதாகர் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 2 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story