அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்


அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
x

புதுச்சத்திரத்தில் 3 பேர் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.

கடலூர்

கடலூர்:

புதுச்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் உள்ளிட்ட 3 டாக்டர்களை எவ்வித விசாரணையும் இன்றி, தங்கள் தரப்பு நியாயங்களை விளக்க வாய்ப்பு அளிக்காமல் தன்னிச்சையாக இடமாறுதல் வழங்கப்பட்டதை கண்டித்து கடலூர் சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க மாநில துணை தலைவர் டாக்டர் புலிகேசி தலைமை தாங்கினார். இதில் டாக்டர்கள் குலோத்துங்கசோழன், சிவக்குமார், வெங்கடேசன், அரசு மற்றும் பட்டமேற்படிப்பு டாக்டர்கள் சங்க நிர்வாகிகள் சாமிநாதன், ஸ்ரீதரன் உள்பட அரசு டாக்டர்கள் சங்க நிர்வாகிகள், அரசு மற்றும் பட்டமேற்படிப்பு நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

முன்னதாக அவர்கள், 3 டாக்டர்கள் பணியிட மாற்றத்தை கண்டிப்பது, டாக்டர்கள், செவிலியர்கள் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவ இலக்குகள் வைப்பதை நிறுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பணியிட மாற்றத்தை ரத்து செய்யாவிட்டால் விரைவில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


Next Story