அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

பெரம்பலூரில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி.) மூலம் தேர்வு செய்யப்பட்டு பணிநியமனம் செய்யப்பட்டுள்ள செவிலியர்கள் சங்கத்தினர் தங்களை பணிநிரந்தரம் செய்து பணிவரன்முறை செய்ய வலியுறுத்தி சென்னையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட முயன்றபோது அவர்களை போலீசார் கைது செய்ததை கண்டித்து பெரம்பலூர் அரசு ஊழியர்கள் சங்கத்தினர் செவிலியர்கள் சங்கத்தினருடன் இணைந்து கலெக்டர் அலுலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் குமரிஅனந்தன் தலைமை தாங்கினார். இதில் எம்.ஆர்.பி. செவிலியர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆனந்த், பொருளாளர் மஞ்சுளா மற்றும் அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story