அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
விருத்தாசலத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடலூர்
விருத்தாசலம்:
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்ட தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித்துறை வட்ட தலைவர் சிவா, வட்டார வளர்ச்சி துணை அலுவலர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் நாட்டுதுரை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மத்திய அரசு வழங்கியதை போல் மாநில அரசும் ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படியை உடனே வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story