'தொழிலாளர் விரோத சட்டத்தை உடனடியாக அரசு திரும்ப பெற வேண்டும்' - எடப்பாடி பழனிசாமி


தொழிலாளர் விரோத சட்டத்தை உடனடியாக அரசு திரும்ப பெற வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
x

தி.மு.க. அரசு மக்கள் நலனுக்கு எதிராக செயல்படுவதை கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக மாற்ற வழி செய்யும் சட்ட மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக ஆகிய கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தன.

இதனைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் இந்த சட்ட மசோதாவிற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் எதிரகட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், தி.மு.க. அரசு மக்கள் நலனுக்கு எதிராக செயல்படுவதை கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது என்றும் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தொழிலாளர் விரோத சட்டத்தை உடனடியாக அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் தமிழக தொழிலாளர்களின் நலன் காக்க அ.தி.மு.க. எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும் என எச்சரிப்பதாக எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Next Story