சென்னை திருமலை திருப்பதி தேவஸ்தான கோவிலில் கவர்னர் ஆர்.என்.ரவி, ராமர் தரிசனம்
குழந்தை ராமர் பிரதிஷ்டை நிகழ்வை, திருமலை திருப்பதி தேவஸ்தானமும், எண்ணற்ற பக்தர்களும் ஜனவரி 3-ந்தேதி முதல் ஒவ்வொரு நாளும் கொண்டாடி வருகிறார்கள்.
சென்னை,
கவர்னர் ஆர்.என்.ரவி, தனது 'எக்ஸ்' சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
சென்னை தியாகராயநகர், திருமலை திருப்பதி தேவஸ்தான கோவிலில், ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி, ஸ்ரீ ராமர் தரிசனம் செய்து வேண்டிக் கொண்டேன். பத்ம பூஷண் விருது பெற்ற பத்மா சுப்பிரமணியம் நிகழ்த்திய நடன வடிவிலான ஸ்ரீராமர் கதையை பார்த்தேன். எதிர்வரும் குழந்தை ராமர் பிரதிஷ்டை நிகழ்வை, திருமலை திருப்பதி தேவஸ்தானமும், எண்ணற்ற பக்தர்களும் ஜனவரி 3-ந்தேதி முதல் ஒவ்வொரு நாளும் கொண்டாடி வருகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கவர்னர் ஆர்.என்.ரவி, திருமலை திருப்பதி தேவஸ்தான கோவிலுக்கு சென்றபோது, அவரது மனைவி லட்சுமியும் உடன் இருந்தார்.
Related Tags :
Next Story