கவர்னர் ஆர்.என்.ரவி நாளை திருப்பூர் வருகை..
மத்திய அரசின் திட்டங்கள் பொதுமக்களை சென்றடைந்து உள்ளதா என்பது குறித்து கவர்னர் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.
திருப்பூர்,
பிற்படுத்தப்பட்ட ஏழை மக்களுக்கு மத்திய அரசின் சார்பாக சூரஜ் திட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் நாளை (புதன்கிழமை) 600 மாவட்டங்களில் மத்திய அரசு திட்டத்தின் மூலம் பிற்படுத்தப்பட்டோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
காணொளி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி இதனை தொடங்கி வைக்கிறார்.இந்த நிகழ்ச்சி திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நாளை மாலை 3.45 மணிக்கு நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார். 300க்கும் மேற்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.
மேலும் மத்திய அரசின் திட்டங்கள் பொதுமக்களை சென்றடைந்து உள்ளதா என்பது குறித்தும் கவர்னர் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.
Related Tags :
Next Story