சட்டப்பேரவையிலிருந்து வெளியேறிய கவர்னர் மாநிலத்தை விட்டே வெளியேற வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்


சட்டப்பேரவையிலிருந்து வெளியேறிய கவர்னர் மாநிலத்தை விட்டே வெளியேற வேண்டும் - கே.பாலகிருஷ்ணன்
x

சட்டப்பேரவையிலிருந்து நடையைக் கட்டிய கவர்னர், மாநிலத்தில் இருந்தே வெளியேற வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டப்பேரவையில் அச்சிடப்பட்ட உரையை வாசிக்காமல் மரபை மீறி கவர்னர் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும் என முதலமைச்சர் பேசியுள்ளார. அரசின் கொள்கை உரையே அவைக் குறிப்பாக இடம்பெற வேண்டும் என்பது சரியான, வரவேற்க வேண்டிய முடிவு. தமிழ்நாடு முதலமைச்சரின் இந்த நடவடிக்கை சட்டமன்ற வரலாற்றில் இதுவரை கண்டிராதது.

அரசியல் சாசன வரம்பினை மீறி தொடர்ந்து செயல்பட்டுவரும் கவர்னர் ஆர்.என்.ரவிக்கு இது பொருத்தமான பதிலடி.

முதலமைச்சரின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த கவர்னர் அவையில் இருந்து முன்கூட்டியே வெளியேறியுள்ளார். தேசிய கீதத்தை புறக்கணித்து அவமதித்துள்ளார். எதிர்க் கட்சி போல கவர்னர் நடந்திருப்பது உரிமை மீறல், மிகுந்த கண்டனத்திற்குரியது. அவையில் இருந்து நடையைக் கட்டிய கவர்னர், மாநிலத்தில் இருந்தே வெளியேற வேண்டும். அதுதான் தமிழ்நாட்டின் விருப்பம்.

சட்டமன்றத்தில் எழும்பிய முழக்கம், தமிழ் நாடெங்கும் எதிரொலிக்க வேண்டும். கவர்னரின் அடாவடிக்கு எதிரான போராட்டக் களத்தில், அனைத்து கட்சிகளும் இணைந்து நிற்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story