ஸ்டெர்லைட் ஆலை குறித்து கவர்னர் பேசியிருப்பது ஆணவத்தின் உச்சம் - வைகோ கண்டனம்


ஸ்டெர்லைட் ஆலை குறித்து கவர்னர் பேசியிருப்பது ஆணவத்தின் உச்சம் - வைகோ கண்டனம்
x

ஸ்டெர்லைட் ஆலை குறித்து தமிழக கவர்னர் பேசியிருப்பது ஆணவத்தின் உச்சம் என்று வைகோ கூறியுள்ளார்.

சென்னை,

ஸ்டெர்லைட் ஆலை குறித்து தமிழக கவர்னர் பேசியிருப்பது ஆணவத்தின் உச்சம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஸ்டெர்லைட் ஆலை குறித்து தமிழக கவர்னர் பேசியிருப்பது ஆணவத்தின் உச்சமாகும். வெளிநாடுகளிலிருந்து பணம் வாங்கிக்கொண்டுதான் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்தார்கள் என்று அதிகார திமிரில் உளறிக் கொட்டியிருக்கிறார் கவர்னர். ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி மாவட்டமே நாசமாகிவிடும் என்று ஏறத்தாழ 30 ஆண்டுகள் தன்னலமின்றிப் போராடிய என்னைப் போன்றவர்கள் நெஞ்சில் ஈட்டி பாய்வதைப் போல் கவர்னர் கொடும் சொற்களை வீசியிருக்கிறார். அதே வெளிநாடுகளிலிருந்து கவர்னர் எவ்வளவு பணம் வாங்கிக் கொண்டு ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாகப் பேசுகிறார் என்பதை மக்கள் எடைபோட்டுப் பார்ப்பார்கள்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் 15 பேர் தங்கள் உயிர்களைப் பலிகொடுத்திருக்கிறார்கள், நீதிமன்றங்களே ஸ்டெர்லைட்டை மூடுவது சரிதான் என்று தீர்ப்பளித்துவிட்டன. சட்டமன்றத் தீர்மானத்தை நிறுத்தி வைத்தாலே நிராகரிப்பதாகிவிடும் என்று எவரும் ஏற்றுக்கொள்ள முடியாத அக்கிரமமான கருத்தைச் சொல்லியிருக்கிறார். இன்றைய கவர்னர் தமிழ்நாட்டின் சாபக்கேடு. இவர் நம் மாநிலத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

1 More update

Next Story