செய்யூர் கிழக்கு கடற்கரை சாலையில் அரசு பஸ்- லாரி மோதல்; டிரைவர் பலி


செய்யூர் கிழக்கு கடற்கரை சாலையில் அரசு பஸ்- லாரி மோதல்; டிரைவர் பலி
x
தினத்தந்தி 18 Jun 2023 7:00 PM IST (Updated: 18 Jun 2023 7:00 PM IST)
t-max-icont-min-icon

செய்யூர் கிழக்கு கடற்கரை சாலையில் அரசு பஸ்- லாரி மோதிய விபத்தில் டிரைவர் பலியானார்.

செங்கல்பட்டு

டிரைவர் பலி

நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் செந்தமிழ்செல்வன். லாரி டிரைவர். லாரி மூலமாக நாகப்பட்டினத்தில் இருந்து ஆற்று மணல் எடுத்து வந்து சென்னையில் இறக்கிவிட்டு நாகப்பட்டினத்துக்கு திரும்பி கொண்டிருந்தார். செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை செய்யூர் அருகே விளம்பூர் கிராமத்தில் சாலை வளைவு பகுதியில் வரும்போது புதுச்சேரியில் இருந்து சென்னை சென்ற அரசு விரைவு பஸ்சின் மீது மோதி விபத்துக்குள்ளானது. அப்போது சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற மற்றொரு அரசு பஸ் விபத்துக்குள்ளாகி நின்ற லாரியின் பின்னால் மோதியது.இதில் லாரி டிரைவர் செந்தமிழ்செல்வன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், அரசு விரைவு பஸ் டிரைவருக்கு வலது காலில் முறிவு ஏற்பட்டது,

போக்குவரத்து பாதிப்பு

பஸ்சில் பயணம் செய் த 10-க்கும் மேற்பட்டோர் சிறுகாயங்களுடன் செய்யூர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பயணிகள் அனைவரும் மாற்று பஸ்கள் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சூனாம்பேடு போலீசார் விபத்தில் பலியான டிரைவர் செந்தமிழ்செல்வன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து சென்னை- புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story