அரசு பள்ளி மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து -மாணவர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு


அரசு பள்ளி மேற்கூரை பெயர்ந்து விழுந்து விபத்து -மாணவர்கள் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்ப்பு
x

புதுக்கோட்டையில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் ராங்கியன்விடுதி பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. அப்போது, வகுப்பறைகளில் மாணவர்கள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதனால் பள்ளி நுழைவாயில் முன்பு அமர்ந்து மாணவர்கள் கல்வி கற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. கஜா புயலின்போது பள்ளியின் மேற்கூரை சேதம் அடைந்த நிலையில், அது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story