இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x

விபத்தில் உயிரிழந்தவரின் மனைவிக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

அரியலூர்

வழக்கு

அரியலூர் மாவட்டம் வெளிப்பிரிங்கியம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்வேல். இவர் கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ந் தேதி தனது ஊரில் இருந்து கீழப்பழுவூரை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பொய்யூர் அருகே சென்றுகொண்டு இருந்தபோது பின்னால் வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி மறுநாள் உயிரிழந்தார். இந்த நிலையில் செந்தில்வேல் மனைவி ரேணுகா தனது கணவரை இழந்ததற்காக இழப்பீடு கேட்டு அரியலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

அரசு பஸ் ஜப்தி

வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 2012-ம் ஆண்டு ரேணுகாவிற்கு சுமார் ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். கடந்த மாதம் வரை அவருக்கு இழப்பீடு வழங்கப்படாததால் இதுகுறித்து அவர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கர்ணன், ரேணுகாவிற்கு ரூ.12 லட்சத்து 12 ஆயிரத்து 782 இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், தவறினால் இழப்பீடு வழங்காத அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்ட பஸ்சை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டார். இதனை அடுத்து முதல் நிலை கட்டளை நிறைவேற்றுனர் (அமீனா) சுரேஷ் ஜெயங்கொண்டம் 4 ரோட்டில் விழுப்புரம் கோட்ட அரசு பஸ்சை ஜப்தி செய்து அரியலூர் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்.


Next Story