காரைக்குடியில் இருந்து கோவைக்கு அரசு குளிர்சாதன பஸ்களை இயக்க வேண்டும்-தொழில் வணிக கழகத்தினர் வலியுறுத்தல்


காரைக்குடியில் இருந்து கோவைக்கு அரசு குளிர்சாதன பஸ்களை இயக்க வேண்டும்-தொழில் வணிக கழகத்தினர் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 20 Jun 2023 12:06 AM IST (Updated: 20 Jun 2023 12:34 PM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் இருந்து கோவைக்கு அரசு குளிர்சாதன பஸ்களை இயக்க வேண்டும் என்று தொழில் வணிக கழகத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

சிவகங்கை

காரைக்குடி

காரைக்குடி தொழில் வணிக கழக தலைவர் சாமிதிராவிடமணி, செயலாளர் கண்ணப்பன் ஆகியோர் காரைக்குடி அரசு போக்குவரத்து கழக மண்டல பொதுமேலாளர் சிங்காரவேலுவை சந்தித்து கோரிக்கை மனு ஒன்று வழங்கினர். அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது:-

காரைக்குடி பகுதியில் இருந்து தொலை தூர நகரத்திற்கு நவீன வசதிகளுடன் கூடிய அரசு பஸ்கள் இயக்க வேண்டும். குறிப்பாக மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட நகருக்கு ரெயில் போக்குவரத்து இல்லாததால் தினந்தோறும் ஏராளமான மக்கள் பஸ்கள் மூலம் பயணம் செய்து வருகின்றனர். காரைக்குடியில் இருந்து தினந்தோறும் திண்டுக்கல்லுக்கு ஒன் டூ திரி பஸ்சையும், நவீன டீலக்ஸ் பஸ்சையும், காலையில் 11 மணிக்கு பழனி வழியாக கோவைக்கு செல்லும் பஸ்சையும், மற்றொரு வழித்தடமான திருச்சி வழியாக கோவை செல்லும் பஸ்சையும் குளிர்சாதன பஸ்சாக மாற்றி இயக்க வேண்டும். அதேபோல் காரைக்குடி ரெயில் நிலையத்திற்கு பகல் நேரங்களில் திருச்சி, திருவாரூர், மன்னார்குடி, ராமேசுவரம், விருதுநகர் ஆகிய பகுதியில் இருந்து வரும் ரெயில் பயணிகளுக்கு வசதியாக கூடுதலான டவுன் பஸ்களை இயக்க வேண்டும். மேலும் காரைக்குடி பகுதியில் இயங்கும் டவுன் பஸ்களை பழுது நீக்கி இயக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அவர்கள் கூறியுள்ளனர்.


Related Tags :
Next Story